ராஞ்ஜனா, ஷமிதாப் படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் தனுஷ், தற்போது, எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர் என்ற ஆங்கில மற்றும் பிரென்ச் படத்தின் மூலம் சர்வதேச நடிகராகியிருக்கிறார்.
தமிழில், வாழ்க்கையை தேடி நானும் போனேன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரயிருப்பதாக அப்படத்தை தயாரித்துள்ள லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

