சினிமா உலகைப்பொறுத்தவரை நடிகைகளுக்கு திருமணமாகி விட்டால் அதன்பிறகு ஒன்று அவர்கள் சினிமாவில் இருந்து வெளியேறி விடுவார்கள், இல்லையேல் கேரக்டர் நடிகையாக மாறிவிடுவார்கள் என்பதுதான் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது.
அதன்காரணமாகவே திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் போய் விடும் என்று சில முன்னணி நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.
சமந்தாவோ திருமணத்திற்கு பிறகும் வழக்கம்போல் பிஸியாக நாயகியாக நடித்து வருகிறார். இது பல நடிகைகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதோடு, முயற்சி செய்தால் திருமணத்திற்கு பிறகும் சமந்தாவைப் போன்று கதாநாயகி பயணத்தை தொடரலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகள், சமந்தாவை ஒரு டிரண்ட் செட்டர் நடிகையாக பார்க்கிறார்கள்.