கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரைக்கு வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழ்நாட்டில் பிரபலமான இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன், அடுத்தமாதம் துவங்க இருக்கிறது. கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.
சீசன் 2வில் பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வருகின்றன. இதில் நடிகை கஸ்தூரியின் பெயரும் அடக்கம். ஆனால் இதை கஸ்தூரி மறுத்துள்ளார்.
“பிக்பாஸில் பங்கேற்க யாரும் என்னை அழைக்கவில்லை. அப்படியே அழைத்தாலும் பங்கேற்கபோவதில்லை. பிக்பாஸை விட சின்ன பாஸ் தான் முக்கியம்” என டுவிட்டரில் தன் மகன் உடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டிருக்கிறார் கஸ்தூரி.