ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். டெல்லி அணியின் தொடக்கம் மந்தமாகவே இருக்க, ரிஷப் பன்ட் இன்று ஒன் மேன் ஷோ காண்பித்தார். கடைசி 5 ஓவர்களில் அவர் காட்டிய அதிரடியால், பந்துவீச்சில் பலமான அணியாகச் சொல்லப்பட்ட ஹைதராபாத் நிலை தடுமாறியது. அதிரடியாக விளையாடைய பன்ட் சதமடித்து அசத்தினார். சதமடித்த பின்னரும் அவரது அதிரடி குறையவில்லை. புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என ரிஷப் பன்ட் 26 ரன்கள் குவித்தார். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. இறுதிவரை அதிரடி காட்டிய ரிஷப் பன்ட், 63 பந்துகளில் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 7 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும். ஹைதராபாத் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.