பிரெஞ்ச் கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் பாரிஸ் செயின்ய் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) – லெஸ் ஹெர்பியர்ஸ் அணிகள் நேற்று மோதின.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் பிஎஸ்ஜி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டது. அந்த அணியின் லோ செல்சோ 26வது நிமிடத்திலும், கவானி 74வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கோப்பையுடன் ஆர்ப்பரிக்கின்றனர் பிஎஸ்ஜி அணி வீரர்கள்.