மே-10ஆம் தேதி மலையாளத்தில் ‘நாம்’ என்கிற படம் ரிலீஸாகிறது. இந்தப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன், மலையாள இளம் நடிகர்கள் வினீத் சீனிவாசனும், தனுஷின் ‘மாரி-2’ பட வில்லன் டொவினோ தாமஸும் கூட நடிகர்களாகவே சில காட்சிகளில் நடித்துள்ளார்கள்.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இவர்கள் மூவருமே இந்தப்படத்தில் நடிப்பதற்கு சம்பளம் என எதுவும் வாங்கிக்கொள்ளாமல் நடித்து கொடுத்துள்ளார்களாம். அறிமுக இயக்குனர் ஜோஷி தாமஸ் இயக்கியுள்ள. இந்தப்படத்தில் ‘அழகின் சென்னை’ என்கிற தமிழ்ப்பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.