பள்ளி குழந்தைகளைகூட ஆசிரியர்கள் அடிக்க கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால் சினிமாவில் ஹீரோயின்களை இயக்குனர்கள் அடிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. அதனை சிலபேர் பொது மேடைகளில் அந்த ஹீரோயினை வைத்துக் கொண்டே பெருமையாக சொல்வதும் தொடர்கிறது. அந்த நேரத்தில் அந்த ஹீரோயின் மனசு எப்படி வலிக்கும் என்பது கூட தெரியாமல் இப்படி பேசுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் தொட்ரா படம்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் அந்த படத்தின் இயக்குனர் மதுராஜ் பேசும்போது “படப்பிடிப்பின் போது ஹீரோயின் வீணாவை அடித்து விட்டேன். படப்பிடிப்பில் நான் பலமுறை ஒரு சைக்கோ போன்று நடந்து கொண்டேன். இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார். இதனை பேசும்போது ஹீரோயின் வீணா தலைகுனிந்து அமர்ந்திருந்நார். இத்தனைக்கும் மதுராஜ் ஒரு அறிமுக இயக்குனர்தான்.