தன் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.
10 நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறவுள்ளார்.
இதனிடையில் விரைவில் உதயமாகவுள்ள அரசியல் கட்சி சம்பந்தமாகவும் மொபைல் ‘ஆப்’ தொழில் நுட்பம் சார்ந்த பணிகளையும் பார்வையிட உள்ளாராம்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்கா பறக்கும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்…
தான் அரசியலுக்கு வருவது உறுதி. அரசியல் கட்சி தொடங்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். அரசியலில் விமர்சனம் என்பதை தவிர்க்க முடியாதது.
சீருடையில் உள்ள காவலர்களை தாக்குவது மன்னிக்க முடியாத குற்றம். அதே நேரம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக போலீஸ் வரம்பு மீறி செயல்படக் கூடாது.
பெண் பத்திரிகையாளர்களை எஸ்வி சேகர் இழிவாக விமர்சித்தது மன்னிக்க முடியாத குற்றம். அவர் தெரிந்து செய்திருந்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் அது மன்னிக்க முடியாது.
படிக்கும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
ஆடிட்டர் குருமூர்த்தி எனது நீண்டகால நண்பர். அவரை சந்திப்பில் வழக்கமானது. அதில் விசேஷம் எதுவும் இல்லை” என்று பேசினார் ரஜினி.