அல்லு அர்ஜுன் நடிப்பில் மே 9ம் வெளிவரவுள்ள தெலுங்கு படம் ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’.
அது தமிழில், ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.
எனவே இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றுது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசினார். அவர் பேசியதாவது…
50 நாட்கள் நடைபெற்ற ஸ்டிரைக்கால் சின்னச் சின்ன விஷயங்களைச் சரி செஞ்சாச்சு.
ஆனால், நடிகர்கள் சம்பளம் என்ற பெரிய விஷயங்களை சீக்கிரம் சரி செய்யனும்.
தமிழ்ல 100 கோடி வியாபாரம் ஆச்சுன்னா நம்ம ஹீரோக்கள் ரூ. 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்குறாங்க. அதுல 10 கோடி ரூபாய் அட்வான்ஸா கேட்குறாங்க.
ஆனா, தெலுங்குல அப்படியில்லை. 12 முதல் 15 கோடி ரூபாய் சம்பளம்தான் கேட்குறாங்க. மேலும் 50 லட்ச ரூபா அட்வான்ஸ் கொடுத்தா போதும்.
தெலுங்கு நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அருமையான புரிதல் இருக்கு. அதனாலேயே அந்த இன்டஸ்ட்ரியே சுபிக்ஷமா இருக்கு.
மத்த செலவு எல்லாம் சேர்க்காமல், நடிகர்கள் சம்பளம் மட்டும் ஒரு நாளுக்கு பல லட்சங்கள் ஆகுது.
சீக்கிரமா இந்தச் சூழல் இங்கு மாறணும். நான் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிடலாம் என்று கூட நினைக்கிறேன்.” என்று விரக்தியாக பேசினார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.