Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

பைசைக்கிள் கிக்… ஏழரை அடி ஜம்ப்… ரொனால்டோவின் கோலில் மிரண்டு நிற்கும் கால்பந்து உலகம்!

April 4, 2018
in Sports
0
பைசைக்கிள் கிக்… ஏழரை அடி ஜம்ப்… ரொனால்டோவின் கோலில் மிரண்டு நிற்கும் கால்பந்து உலகம்!

‘கோல்…’ சில கோல்கள் போட்டியின் முடிவை மாற்றும். சில கோல்கள் கோப்பையை வென்று கொடுக்கும். ரசிகர்களைக் கொண்டாடவைக்கும், பரவசப்படுத்தும், தோல்வியின் விளிம்பில் அடிக்கப்படும் கோல்கள் ஆசுவாசப்படுத்தும். ஆனால், ஒருசில கோல்கள் மட்டுமே காலம் கடந்தும் பேசப்படும்; கால்பந்தின் அடையாளமாக விளங்கும். அந்த ஆட்டத்தின் வரலாற்றில் அதற்கென்று ஒரு இடம் பிடித்திருக்கும். அப்படியொரு கோல்தான், நேற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தது. ப்யூர் கிளாஸ்!

யுவன்டஸ் – ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டி. கடந்த சீசன் ஃபைனலில் மோதிய இரு அணிகளும் இந்த முறை காலிறுதியிலேயே மோதிக்கொண்டதால், எக்கச்சக்க எதிர்பார்ப்பு. ‘மாட்ரிட்டின் அட்டாக்கா, யுவன்டஸின் டிஃபன்ஸா?’ எது வெல்லும் என்று பார்க்க, கால்பந்து உலகம் காத்திருந்தது. ஆனால், ரொனால்டோ ஒற்றை ஆளாக யுவன்டஸ் அணியை பஸ்பமாக்கிவிட்டார். இரண்டு கோல்கள்… அதுவும் away கோல்கள். போட்டியை அங்கேயே முடித்துவிட்டார். ஆனால், அந்த வெற்றி ஒன்றும் பெரிய விஷயமல்ல. அவர் அடித்த அந்த இரண்டாவது கோல்..! ரொனால்டோவை வெறுப்பவராக இருந்தாலும், அந்த கோலுக்காக அவருக்கு மரியாதை செலுத்தத் தூண்டும். அவரது ரசிகர்களைப் பரவசத்தின் எல்லைக்கே கொண்டுசொல்லும்.

ஆட்டத்தின் 64-வது நிமிடம், யுவன்டஸ் கோலின் வலது விங்கில் பந்தை வாங்கினார், ரியல் மாட்ரிட் டிஃபண்டர் டேனி கர்வகால். உடனே அதை பாக்ஸுக்குள் கிராஸ் செய்தார். ரொனால்டோ மின்னலெனப் பாய்ந்தார், back flip அடித்தார், பந்தை உதைத்தார் – கோ…………………….ல்! அற்புதமான overhead kick. ஒருநொடி, அரங்கமும் ஸ்தம்பித்து நின்றது. அதை வர்ணிக்கும் அளவுக்கு வர்ணனையாளர்களின் vocabulary-யில் வார்த்தைகள் இருந்திருக்காது. அவர்களும் பிரமித்துதான் நின்றார்கள். அங்கு என்ன நடந்தது என்று சுதாரிக்க அவர்களுக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. ஒரு மூலையில் அமர்ந்திருந்த மாட்ரிட் ரசிகர்கள் கொண்டாட, யுவன்டஸ் ரசிகர்கள் மனமுடைந்துபோனார்கள்.

Previous Post

காமன்வெல்த் போட்டிகளில் விளையாட மாட்டேன் என அச்சுறுத்தியது சரியா? சாய்னா நெஹ்வாலுக்கு ஜூவாலா கட்டா கேள்வி

Next Post

`தீவிரவாத செயல்களை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவத்திடம் கூறுங்கள்!’

Next Post

`தீவிரவாத செயல்களை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவத்திடம் கூறுங்கள்!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures