டெஸ்ட் மேட்ச்னா ஒயிட், ஒரு நாள் சர்வதேசப் போட்டினா ப்ளூ, IPL னா கலர்ஃபுல் ஆனா, யூனிஃபார்ம். மைதானத்துலதான் சீருடைனா, விளம்பர படங்கள்லயும் அதே ஜெர்ஸிதான் நம்ம கிரிக்கெட் ஹீரோக்களுக்கு காஸ்ட்யூம். ஆனால், ஸ்டைல் ஐகான்ஸ் சினிமாவுல மட்டுமில்லை, விளையாட்டிலும் இருக்கிறார்கள். அதிலும் அனைவருக்கும் பிடித்த கிரிக்கெட்டில்தான் டாப் ஐகான்ஸ் உள்ளனர். வீரர்களின் ஸ்டைல்லை பின்பற்றும் தீவிர ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்களின் டீப் ஃபேஷன் சென்ஸ் என்னவென்று. இப்போ நாமும் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமே! கிரவுண்ட விட்டு வெளில வந்து, நம்ம நாயகர்களின் அவுட்ஸ்டேண்டிங் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்குனு பார்ப்போமா?
ஹார்திக் பாண்டியா :
கட்டுக்கோப்பான உடலமைப்பு, பிரைட் ஹேர்கலர்ஸ், விதவிதமான ஹேர்ஸ்டைல், வித்தியாசமான காஸ்ட்யூம், ரொம்பவே கூலான லுக். இதுதான் ஹார்திக் பாண்டியா. கைகளில் டாட்டூ, காதுகளில் கடுக்கன், கழுத்தில் கனமான செயினுடன் ட்ரெண்டி இளைஞர் பாண்டியா. வெஸ்டர்ன் உடையில் மட்டுமல்ல, அவர்களின் கலாசார உடையிலும் புதுமையைப் புகுத்தி ஐகானாகவே மாறிவிட்டார் இவர். சாதாரண குர்த்தாதான் ஆனால், அவர் அதை உடுத்திக்கொள்ளும் விதம், வித்தியாசம். விளையாட்டில் மட்டுமல்ல, தன்னை மெருகேற்றிக்கொள்ள பல புதுமைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பாண்டியா, ஃபேஷன் உலகிலும் ஆல்ரவுண்டர்தான்.