‘மில்லியன் டாலர்’ என்பது வெளிநாடுகளில் பெருமைக்குரிய ஒரு விஷயமாக இருக்கும். அதாவது 10 லட்சம் டாலர் என்பது பெரிய தொகைகளில் ஒரு சிறந்த குறைந்த தொகை. அமெரிக்காவில் வெளியாகும் தமிழ், தெலுங்குப் படங்களில் ஒரு படம் ஒரு மில்லியன் டாலர், அதாவது பத்து லட்சம் டாலர் வசூலிப்பதென்பது பெரிய வெற்றியைப் பெறுவதற்கான சமம்.
அந்த விதத்தில் தென்னிந்திய நடிகைகளில் அதிக முறை மில்லியன் டாலர் வசூலைக் கடந்த மில்லியன் டாலர் பேபியாக இருக்கிறார் சமந்தா. அவர் நடித்த 10 தெலுங்குப் படங்களும், “தெறி, 24, மெர்சல்’ ஆகிய தமிழ்ப் படங்களும் அமெரிக்காவில் 10 லட்சம் டாலர் வசூலைக் கடந்திருக்கின்றன.
திருமணமான பின்னும் சமந்தாவிற்கு இருக்கும் வரவேற்பு மற்ற இளம் நடிகைகளை நன்றாகவே பொறாமைப்பட வைத்திருக்கிறது. சமந்தா நடித்து இந்த வருடத்தின் முதல் படமான ‘ரங்கஸ்தலம்’ தெலுங்குப் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
அடுத்து தமிழ், தெலுங்கில் ‘மகாநதி, இரும்புத் திரை, சீம ராஜா, சூப்பர் டீலக்ஸ், யு டர்ன்’ என இந்த ஆண்டிலேயே ரிலீசுக்காக சில படங்களை வைத்திருக்கிறார் சமந்தா. அந்த மில்லியன் டாலர் பேபி கணக்கில் மேலும் சில படங்கள் நிச்சயம் சேர்ந்துவிடும்.