ஜெயம் ரவி நடித்த, வனமகன் படத்தின் மூலம், தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகை, சாயிஷா சாய்கல். முதல் படத்திலேயே தன் அபாரமான நடனத்தால், ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், அவரது புயல் வேக நடனத்தை பார்த்த கோலிவுட் கதாநாயகர்கள் அதிர்ந்து போயினர். தற்போது ஆர்யாவுடன், கஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதியுடன், ஜூங்கா படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலுமே சாயிஷாவுடன் நடனமாடுவதற்கு முன், ஒருமுறைக்கு பலமுறை ஒத்திகை பார்த்த பின்னரே கேமரா முன் வந்திருக்கின்றனர் மேற்படி நடிகர்கள்! ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு!