ரஜினியுடன் நடித்துள்ள 2.ஓ படத்தைத் தவிர தமிழில் நடிகை எமி ஜாக்சனுக்கு வேறு படங்கள் இல்லை. தி வில்லன் என்ற கன்னட படத்தில் மட்டும் நடிக்கிறார். அடுத்தபடியாக ஹாலிவுட் சினிமா பக்கம் எமியின் கவனம் திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்திய படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அவ்வப்போது படுகவர்ச்சியான போட்டோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவார் எமி. தற்போது பிகினி உடையில் ரசிகர்களை சூடேற்றும் விதத்தில் எமியின் கவர்ச்சியான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.