ஒன்ராரியோ (கனடா) மாகாண உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் (Indoor Track & Field Championship) வெற்றிகிண்ணத்தை தொடர்ந்து 8வது முறையாக தனதாக்கிகொண்ட யுனைற்றட் விளையாட்டுக் கழகம்மார்ச் 24ஆம் 25ஆம் திகதிகளில் York University Toronto Track and Field Centreஇல் இடம்பெற்ற ஒன்ராரியோ மாகாணத்தின் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான உள்ளரங்க தடகள (Track and Field) சாம்பியன்ஷிப் (Championship) போட்டியில் 8வது (2011 – 2018) வருடமாக யுனைற்றட் விளையாட்டுக் கழகம் 385.50 புள்ளிகளை பெற்று சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.
இதில்Ontario மாகாணத்தின் 51 பல்லின விளையாட்டுக் கழகங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.
2வது இடத்தைப் பெற்ற Flying Angels Track Clubபை விட104.25 புள்ளிகளை பெற்றமை குறிப்பிடதக்கது.