கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘லைப் ஆப் ஜோசுட்டி’ படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் ரக்சனா நாராயணன் குட்டி. அதன்பின் சின்னச்சினதாக சில வேடங்களில் தலைகாட்டிய இவர், டிவி தொகுப்பாளராகவும் மாறினார்.
இந்நிலையில் தமிழில் தேவதாசி முத்துவேலம்மாள் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ள ‘நித்யசுமங்கலி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் ரக்சனா. தேவதாசிகளின் வாழ்க்கையையும் அவர்களது கலாச்சாரத்தையும் மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப்படத்தில் அவர் ஆராய்ச்சி மாணவியாக நடிக்கிறார்.
இந்தப்படத்தை இயக்கும் வினோத் மங்கராவிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரியவுள்ள ரக்சனா, நடனகாட்சிகளையும் வடிவமைக்க இருக்கிறாராம்.