மம்முட்டி நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ‘பரோல்’. சரத் சந்தித் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக இனியா நடிக்க, மம்முட்டியின் தங்கையாக நடித்துள்ளார் மியா ஜார்ஜ்
‘முன்னறியிப்பு’ படத்தை தொடர்ந்து இதில் மீண்டும் சிறைக்கைதியாக நடித்திருக்கிறார் மம்முட்டி. இது பேமிலி த்ரில்லராக உருவாகியுள்ளதாம். இந்தப்படம் வரும் மார்ச்-31ஆம் தேதி, அதாவது சனிக்கிழமை வெளியாக இருக்கிறது.
பொதுவாக ஸ்டார் படங்கள் என்றால் ஒருநாள் முன்னதாக வியாழன்றே ரிலீஸ் ஆவது தான் நடைமுறை. ஆனால் சில சென்டிமென்ட்கள் காரணமாக வெள்ளியன்று கூட ரிலீஸ் செய்யாமல், சனிக்கிழமை படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யமான ஒன்றுதான்.