சிரஞ்சீவி சுதந்திர போராட்ட வீரராக நடித்து வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுரேந்தர் ரெட்டி இயக்கி வரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், நயன்தாரா, சுதீப், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படம் சம்பந்தப்பட்ட எந்தவொரு விசயமாக இருந்தாலும் சிரஞ்சீவியின் ஆலோசனையின் பேரில்தான் வெளியிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் சிரஞ்சீவி நீண்ட தலைமுடி கெட்டப்பில் நடித்த கெட்டப்பை யூனிட்டில் உள்ள யாரோ ஒருவர் செல்போனில் படமெடுத்து வெளியிட்டு விட்டார். அது இணையதளங்களில் வைரலாகிவிடடது. இதையடுத்து சைரா நரசிம்மரெட்டி யூனிட் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளது.
இதையடுத்து, இனிமேல் இப்படம் சம்பந்தப்பட்ட எந்தவொரு விசயமும் வெளியில் கசியக்கூடாது என்று படக்குழுவுக்கு உத்தரவு போட்டுள்ளார் சிரஞ்சிவி. அதன்காரணமாக, படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.