ரஜினியும், கமலும் இப்போது அரசியல் களத்தில் நிற்கிறார்கள். அவரது ரசிகர்கள் கட்சித் தொண்டர்களாக மாறி உற்சாகமாக பணியாற்றி வருகிறார்கள். ரஜினியையும், கமலையும் வாழ்த்தி சரமாரியாக போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள். மறைந்த பெரும் தலைவர்களோடு ஒப்பிட்டும் போஸ்டர்கள் ஒட்டுகிறார்கள். இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் வீரமாணிக்கம் சிவா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நடிகர் கமல்ஹாசன், கடந்த 21ந் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார். அந்த விழாவின்போது அவரது ரசிகர்கள் “தமிழகத்தின் தாயும் தந்தையும் நீயே” என்றும், அவரை அப்துல்கலாமாக மாற்றி படம் வெளியிட்டும் போஸ்டர் ஒட்டினார்கள். அதேப்போல மதுரவாயலில் நடந்த ஒரு பல்லைகழக விழாவுக்கு வந்த ரஜினியை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டரில் வாழும் காமராஜரே என்று அவரை காமராஜருடன் ஒப்பிட்டிருந்தனர்.
இது மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. அவர்களது புகழை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே இதுகுறித்து ரஜினி, கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.