ஸ்ரீதேவியை நினைத்து இங்கிலிஷ் விங்கிலிஷ் இயக்குனர் கவுரி ஷிண்டே உருக்கமான ட்வீட் போட்டுள்ளார். பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான ஸ்ரீதேவி துபாய் சென்ற இடத்தில் உயிர் இழந்தார். இந்தி, தமிழ், தெலுங்கு திரையுலகை ஆண்ட ஸ்ரீதேவி கணவர், மகள்களை கவனித்துக் கொள்ள 15 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார்.
பின்னர் கவுரி ஷிண்டே இயக்கிய இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். 2012ம் ஆண்டு வெளியான அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதில் இருந்து ஸ்ரீதேவியும், கவுரியும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். இந்நிலையில் ஸ்ரீதேவி பற்றி கவுரி உருக்கமான ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, ஸ்ரீ….அடுத்த வாரம் உங்களை சந்திக்க முடியாது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.