தென்னிந்திய மொழிப்படங்களில் கடந்த 17 ஆண்டுகளாக நடித்து வருபவர் ஸ்ரேயா. சமீபத்தில் இவர் நடித்த காயத்ரி தெலுங்கு படம் வெளியான நிலையில், தமிழில் அவர் நடித்துள்ள நரகாசூரன் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த தனது பாய் பிரண்ட் ஆண்ட்ரி கோஷ்சேவ்வை மார்ச் 18-ந்தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் ஸ்ரேயா. ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் 3 நாட்கள் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
தற்போது ஸ்ரேயாவுக்கு 35 வயதாகிறது. ஆனால் அவரது வருங்கால கணவராகப்போகும் ஆண்ட்ரிவிற்கு 25 வயது தான் ஆகிறது என்றொரு செய்தி வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. அது உண்மையென்றால், தன்னை விட 10 வயது குறைவானவரை திருமணம் செய்து கொள்கிறார் ஸ்ரேயா.