தமிழகத்தில் பிறந்து ஹிந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கோலோச்சிய நடிகை ஸ்ரீதேவி, கடந்த சில தினங்களுக்கு முன் துபாயில் திடீரென மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று மும்பையில் தகனம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் ஸ்ரீதேவிக்கு மிகவும் நெருக்கமான தோழியான பிங்கி ரெட்டி என்பவர், ஸ்ரீதேவி துபாயில் நடைபெற்ற திருமணத்திற்கு செல்வதற்கு முன் தன்னிடம் பேசினார் என்றும், அப்போது தனக்கு சற்றே உடல்நலமில்லாமல் இருப்பதாகவும், ஆனால் முக்கியமான திருமணம் என்பதால் போய்த்தான் ஆக வேண்டும் என கூறியதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீதேவியும் போனிகபூரும் ஆதர்ச காதல் தம்பதிகளாக வாழ்க்கை நடத்தினார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஸ்ரீதேவியை விட சற்று வயது குறைந்த இந்த பிங்கி ரெட்டி, பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் மகளாவார். ஸ்ரீதேவியின் எட்டாவது வயதில் இருந்து அவரது நெருங்கிய தோழியாக இருந்து வருகிறார். மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் நட்பு வட்டாரத்தில் இவர் ரொம்பவே முக்கியமானவராம்.