சமீபத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ‘கேப்டன்’ என்கிற படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படம் கேரளாவின் மறைந்த முன்னாள் புட்பால் விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
சமீபத்தில் இந்தப்படத்தில் நடித்தது குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் ஜெயசூர்யா. இந்தப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்கியபோது, கதையின் நாயகன் வி.பி.சத்யனாகவே மாறிவிட்ட ஜெயசூர்யா, கதாநாயகியாக நடித்த அனு சித்தாராவை பலமாக அறைந்து விட்டாராம்.
காட்சி நன்றாக படமானாலும், நாயகியை, ஒரு பெண்ணை அறைந்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியால் தொடர்ந்து அனு சித்தாராவின் முகம் பார்த்து பேசவே வெட்கப்பட்டாரம் ஜெயசூர்யா. ஆனால் அனு சித்தாரவோ, நீங்கள் செய்தது வெறும் நடிப்புக்காகத்தானே என சமாதனப்படுத்தியதும் தான் இயல்பாக பேச ஆரம்பித்தாராம்.