நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தாயை நினைத்து மும்பையில் கதறிக் கொண்டிருக்கிறார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். மூத்த மகள் ஜான்வி கபூருக்கு படப்பிடிப்பு இருந்ததால் அவர் மட்டும் துபாய் செல்லவில்லை. அம்மா செல்லமான ஜான்வி தாயின் மரண செய்தி அறிந்து துடிதுடித்துவிட்டாராம்
மும்பையில் உள்ள நடிகரும், சித்தப்பாவுமான அனில் கபூரின் வீட்டில் தங்க வைகப்பட்டுள்ளார் ஜான்வி. தாய் இறந்த துயரம் தாங்க முடியாமல் ஜான்வி அழுது கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.
போனி கபூரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகனான நடிகர் அர்ஜுன் கபூருக்கு ஸ்ரீதேவியை பிடிக்காது. தனது தாயின் வாழ்க்கையை கெடுத்தவர் என்ற கோபம் உண்டு.
தனது பகை, கோபத்தை எல்லாம் மறந்துவிட்டு அர்ஜுன் கபூர் தனது தங்கை அன்ஷுலாவுடன் சித்தப்பா அனில் கபூர் வீட்டிற்கு சென்று ஜான்வியை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
ஜான்வி கபூரின் நண்பர்கள் பலரும் அனில் கபூரின் வீட்டிற்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஜான்விக்கு அவர்கள் ஆறுதல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்
நடிககைள் ராணி முகர்ஜி, ரேகா, ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் அனில் கபூரின் வீட்டிற்கு சென்று தாயை இழந்து துடிக்கும் ஜான்வி கபூருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.