பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு தனது 54 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.
துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
கடந்த 1963ஆம் ஆண்டு பிறந்த ஸ்ரீதேவி தனது நான்காம் வயதில் ‘துணைவன்’ திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இதனிடையே ஸ்ரீதேவி மறைவுக்கு சில நிமிடங்கள் முன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பகிர்ந்த ட்வீட் வைரலாகி வருகிறது. நேற்றிரவு துபாய் நேரப்படி 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதேவி மறைவு செய்தி இந்திய நேரப்படி 3 மணியளவில்தான் ஊடகங்களில் வெளியானது. ஆனால் நேற்றிரவு 1.15 மணியளவில் நடிகர் அமிதாப் பச்சன் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ஏதோ தப்பா படுது.. வித்தியாசமான பதட்டம் நிலவுகிறது.. ஏன் என்று தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ட்வீட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி மறைவு செய்தி வெளியானது. இதனையடுத்து அமிதாப் பச்சனின் ட்விட்டர் பதிவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். ’ஸ்ரீதேவியின் மறைவுப் பற்றி அமிதாப் பச்சனின் ஆறாம் உணர்வுக்கு முன்பே தெரிந்திருக்கிறது’ , ’இதை நம்பவே முடியவில்லை’ என்று நெட்டிசன்ஸ் ரீட்வீட் செய்து வருகின்றனர்.