தமிழ் சினிமாவின் சில படங்களில் மட்டுமல்லாமல், சின்னத்திரையில் ”வாணி ராணி” மற்றும் பல சீரியல்களிலும் நடித்த பெருமைக்குரியவர் கோவை தேசிங்கு.
இவர் சபரிமலையில் உள்ள சரங்குத்தி எனும் இடத்தில் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
மேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே இவரது உயிர் பிரிந்துள்ளது.
இவரது மரணம் சின்னத்திரை, வெள்ளித்திரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நடிகர் நடிகைகள் தற்போது இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.