ஆர்யா, சந்தோஷ் சிவன் பங்குதாரர்களாக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘தீவண்டி’.. மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தப்படத்தை பெலினி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ‘தீவண்டி’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தற்போது ‘மாரி-2’வில் டொவினோ தாமஸை வில்லனாக்கியுள்ள இயக்குனர் பாலாஜி மோகனும், நேற்று கௌதம் மேனன் வெளியிட்ட ‘உலவிரவு’ ஆல்பத்தில் டொவினோவுடன் ஜோடியாக நடித்திருந்த திவ்யதர்ஷினி(டிடி)யும் டொவினோவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.