ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தற்போது தடாக் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இஷான் கட்டர் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கரன் ஜோஹர் தயாரித்து வருகிறார். முதல் படத்திலேயே மகளுக்கு பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்தி விட வேண்டும் என்று ஒவ்வொரு விசயத்திலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரீதேவி.
இந்த நிலையில், கடந்த வாரம் நடந்த பேஷன் ஷோவில் மகள் ஜான்வி கபூருடன் கலந்து கொண்டுள்ளார் ஸ்ரீதேவி. அப்போது, ஜான்வியை சோலோவாக போட்டோ எடுக்க புகைப்பட கலைஞர்கள் அழைத்துள்ளனர். அதையடுத்து, ஜான்வியும் போஸ் கொடுக்க தயாரானார். ஆனால், ஸ்ரீதேவி இதை தடுத்துவிட்டார். என் உத்தரவின்றி தனியாக எங்கும் போஸ் கொடுக்க கூடாது என கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.