சமீபத்தில் அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் பாகமதி. விமர்சன ரீதியாக படம் வரவேற்பு பெறவில்லை என்றாலும் படம் வசூலில் சிறப்பாக உள்ளது. அந்தவகையில், அமெரிக்காவில் இப்படம் ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது.
இதற்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா நாயகியாக நடித்திருந்த பாகுபலி-2 படம் ஒரு மில்லியன் டாலரை கடந்து வசூலித்துள்ளது.
என்றபோதும், பாகமதி படத்தைப்பொறுத்தவரை அனுஷ்காவை மட்டுமே முன்வைத்து கிடைத்துள்ள வசூல் என்பதால் இது அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் அனுஷ்கா செய்த மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.