இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் நட்சத்திர வீரராக இருந்தவர் கபில்தேவ். இவரது தலைமையிலான இந்திய அணி 1983ல் உலக கோப்பையை கைப்பற்றியது. இதை மையமாக வைத்து தற்போது ஹிந்தியில் 83 படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர்சிங் நடிக்கிறார். கபீர்கான் இயக்குகிறார்.
திட்டமிட்டபடி படப்பிடிப்பு வேலைகள் துவங்காததாலும், ரன்வீர் சிங் சில படங்களில் பிஸியாக நடைபெறுவதால் இதன் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக 019ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி 83 படத்தை வெளியிடயிருப்பதாக அறிவித்திருந்தவர்கள், போது 2019 ஆகஸ்ட் 30-ந்தேதி படத்தை வெளியிடயிருப்பதாக மாற்றுத்தேதி அறிவித்துள்ளனர்.