மலையாள இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன்.. சில படங்களில் ஹீரோவாக நடித்த இவர், தற்போது நடிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, அண்ணன் வழியை பின்பற்றி டைரக்சனுக்குள் நுழைந்துள்ளார். நயன்தாரா, நிவின்பாலி நடிக்கும் இந்தப்படத்திற்கு ‘லவ் ஆக்சன் ட்ராமா’ என டைட்டிலும் வைத்துவிட்டார்கள்..
வினீத் சீனிவாசன் – நிவின்பாலி – தயன் சீனிவாசன் கூட்டணியில் எப்போதுமே முக்கியமான ஆளாக கருதப்படும் அஜூ வர்கீஸ் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார். அதனால் முழுக்க முழுக்க இந்தப்படத்தில் தனது கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காகவே தனக்கு வந்த பட வாய்ப்புகள் பலவற்றையும் ஒதுக்கி தள்ளிவிட்டாராம் அஜூ வர்கீஸ்.
தனது தம்பியின் முதல் படமே மாஸ் ஹிட்டாக அமைய வேண்டும் என்பதற்காக இந்தப்படத்திற்கு தானே கதை எழுதியுள்ளார் இயக்குனர் வினீத் சீனிவாசன்.