கடந்த சில மாதங்களுக்கு முன் மோகன்லால் ஹீரோவாக நடிக்க ‘லூசிபர்’ என்கிற படத்தின் மூலம் தான் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்க இருப்பதாக நடிகர் பிருத்விராஜ் அறிவித்தார். ஒருபக்கம் மோகன்லாலும் இன்னொரு பக்கம் பிருத்விராஜூம் மாறிமாறி பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் இந்த அறிவிப்பு அப்படியே காற்றில் போய்விடுமோ என இருதரப்பு ரசிகர்களும் கவலைப்பட்டு வந்தார்கள்..
ஆனால் இதில் எந்த மாற்றமும் இல்லை என சமீபத்தில் கூறியுள்ளார் பிருத்விராஜ். வரும் பிப்ரவரியில் ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாராம் பிருத்விராஜ்.. அதே படத்திற்காக உடல் எடையை குறைக்க சில மாதங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்க இருக்கிறாராம்.
இந்த இடைவெளியில் தான் மோகன்லாலின் ‘லூசிபர்’ படத்தை இயக்கி முடிக்க திட்டமிட்டுள்ளாராம் பிருத்விராஜ். அதற்கேற்ப மோகன்லாலும் இப்போதே தேதிகளை ஒதுக்கி தந்துவிட்டாராம்.