கொஞ்சம் வெயிட்டான, போல்டான கேரக்டர்கள் என்றால் பெரும்பாலான மலையாள இயக்குனர்களின் சாய்ஸாக இருப்பவர் நடிகை ஷிவதா நாயர் தான். அந்தவகையில் ‘சூ சூ சுதி வாத்மீகம்’, லக்ஷ்யம் ஆகிய படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய ஷிவதா, தற்போது அதே போன்றதொரு வேடத்தில், குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக ‘சிகாரி சாம்பு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து, தற்போது உருவாக இருக்கும் ‘சாணக்ய தந்திரம்’ படத்தில் ஒரு மிகப்பெரிய கம்பெனியின் சி.இ.ஓ ஆக, முக்கியமான முடிவுகளை அதிரடியாக எடுக்கும் துணிச்சல் மிகுந்த பெண் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் ஷிவதா.
