பாகுபலி-2 படத்தை அடுத்து ஒரு மல்டி ஹீரோ கதையை படமாக்குகிறார் ராஜமவுலி. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. பாலிவுட் வியாபாரத்தை கருத்தில் கொண்டு ஹிந்தி நடிகர்களையும் இந்த படத்தில் நடிக்க வைக்க எண்ணியுள்ளார்.
தனது புதிய படம் குறித்து ராஜமவுலி அளித்துள்ள ஒரு பேட்டியில், இப்போதெல்லாம் ரசிகர்கள் தாங்கள் படம் பார்க்க டிக்கெட்டிற்கு கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மரியாதை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது ஸ்டார் வேல்யூ கொண்ட நடிகர்கள் – டைரக்டர்கள் என்பதை விட நல்ல படங்களை எதிர்பார்க்கிறார்கள்.
பாகுபலி-2விற்கு பிறகு எனது படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால், அடுத்தபடியாக அழுத்தமான ஒரு கதையில், ரசிகர்கள் டிக்கெட்டிற்காக கொடுக்கும் பணத்தின் வேல்யூவை புரிந்து படத்தை இயக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார் ராஜமவுலி.