நேரம், ராஜா ராணி மற்றும் நைய்யாண்டி உட்பட பல படங்களில் நடித்த மலையாள நடிகை நஸ்ரியா, மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்த பின், நடிப்பை விட்டு விலகியிருந்தார். ஆனால், தற்போது அஞ்சலிமேனன் இயக்கத்தில், பிருத்விராஜ் நடிக்கும் படத்தில் மீண்டும் நடிக்க வருகிறார். இத்தகவலை, தன் இணையதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள நஸ்ரியா, ‘திருமணத்திற்கு பின் மெச்சூரிட்டியாகி விட்ட நான், இனிமேல் மெச்சூரிட்டியான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்…’ என்று தெரிவித்துள்ளார். தன் காரியம் என்றால், தன் சீலையும் பதைக்கும்!