Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத பெளன்ஸரும் பிலிப் ஹியூஸ் மரணமும்…!

November 28, 2017
in Sports
0
இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத பெளன்ஸரும் பிலிப் ஹியூஸ் மரணமும்…!

2014-ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி. இடம்: சிட்னி மைதானம். தெற்கு ஆஸ்திரேலியாவுக்கும், நியூ சவுத் வேல்ஸுக்கும் இடையேயான போட்டி. முதல் இன்னிங்ஸை தெற்கு ஆஸ்திரேலியா சிறப்பாக தொடங்கியிருந்தது. 49-வது ஓவரின் மூன்றாவது பந்து. வேகப்பந்துவீச்சாளர் சீன் அபாட் கைகளிலிருந்து பந்து வெளியேறியது மட்டும்தான் அனைவருக்கும் தெரியும். அடுத்த நொடி நடந்தது 21-ம் நூற்றாண்டில், கிரிக்கெட் உலகில் நடந்த மிகப்பெரிய சோகம். ஆம், அந்த பந்து பெளன்ஸராக எகிறியது. தடுக்க முயன்ற தொடக்க வீரர் பிலிப் ஹியூஸின் தலையை பதம்பார்த்தது. அப்படியே நிலைகுலைந்து சரிந்தார் ஹியூஸ். 63 ரன்களுடன் நாட் அவுட்டாகமல் இருந்த ஹியூஸ் அதன்பின் கண் முழிக்கவே இல்லை. மருத்துவமனையில் நவம்பர் 27-ம் தேதி மரணமடைந்தார். ஆஸ்திரேலியா மட்டுமல்ல கிரிக்கெட் உலகமே கண்ணீர் வடித்தது. ஜென்டில்மேன் கேம் டேஞ்சரஸ் கேம் ஆனது.

பிலிப் ஹியூஸ் நம்பிக்கையான கிரிக்கெட் வீரர். 1988 நவம்பர் 30-ம் தேதி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்தவர். சிறுவயதில் ரக்பி வீரராக கலக்கியவர், பின்னாளில் சிறந்த கிரிக்கெட் வீராரக தன்னை வளர்த்துக் கொண்டார். 17-வது வயதில் சிட்னி கிரேட் கிரிக்கெட்டில் 141 ரன்கள் விளாசி திறமையை நிரூபித்தார். அப்போதுதான் ஆஸ்திரேலிய தேசிய அணியின் தேர்வுக்குழுவின் பார்வை அவர் மீது பட்டது.

2009-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், முதல் போட்டியில் சந்தித்த நான்காவது பந்தில் டக் அவுட்டானார். அடுத்த இன்னிங்ஸில் 75 ரன் குவித்து தன் தேர்வை நியாயப்படுத்தினார். அடுத்த டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸிலும் சதம். ஆனாலும், ஷார்ட் பிட்ச் பந்துகளை சந்திக்க தடுமாறுவதாக ஆஷஸ் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். உள்ளே வெளியேவாக இருந்த ஹியூஸ் 2013-ம் ஆண்டு இலங்கை தொடரில் இரண்டு சதமடித்து மிரட்டினார். 2014-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடிய ஹியூஸ் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த போட்டியில் சீன் அபோட்டும் இவரோடு ஆடினார்.

2014 டிசம்பரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தது. எப்படியாவது இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துவிட வேண்டுமென உள்ளூர் தொடரில், தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக அசத்திக் கொண்டிருந்தார். ஆனால், சீன் அபாட்டின் அந்த பெளன்ஸர், இந்த நூாற்றாண்டின் மறக்க முடியாத விபத்தாக மாறிவிட்டது.

ஹியூஸ் மயங்கி விழுந்தார்; சீன் அபோட் மன அழுத்தத்துக்கு ஆளானார்; ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கதறி அழுதார்; சிட்னியில் சதமடித்து மயங்கி விழுந்த இடத்தில் மண்டியிட்டு முத்தமிட்டார் டேவிட் வார்னர். சிட்னி ஸ்கோர்கார்டு, 63 ரிட்டயர்டு ஹர்ட் என காட்டாமல், 63 நாட் அவுட் என்று ஹியூஸின் நினைவுகளை நாட் அவுட்டாக வைத்திருந்தது. மைக்கேல் க்ளார்க் தன் சுயசரிதையில், பால்ய நண்பனைப் பற்றி நெகிழ்ந்துள்ளார்.

ஹியூஸின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்றது. அதில் அன்றைய நாளில் மொத்தம் 23 பெளன்ஸர்கள் வீசப்பட்டன. அதில் 20 பெளன்ஸர்களை ஹியூஸ் சந்தித்துள்ளார். எந்த உள்நோக்கத்தோடும் அவை வீசப்படவில்லை. போட்டியின் தேவைக்காக வீசப்பட்டது என்றது விசாரணை அறிக்கை. ஹெல்மெட் பழைய மாடல். அதில் பாதுகாப்பு வசதி குறைவு என காரணங்கள் நீண்டன. எல்லாவற்றையும் தாண்டி ஹியூஸ் இப்போது இல்லை. கனமான நினைவுகளுடன் ஆஸி மூன்று ஆண்டுகளைக் கடந்துவிட்டது.

2014 ஹியூஸ் மறைவுக்கு பின் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா தொடரில், மிச்செல் ஜான்சன் வீசிய பெளன்ஸர் விராட் கோலியின் ஹெல்மெட்டை தாக்கியது. அடுத்த நொடி 11 ஆஸி வீரர்களும் ஓடி வந்து கோலியை நலம் விசாரித்தனர். ஏனெனில், பிலிப் ஹியூஸை அவர்கள் மறக்கவில்லை. தற்போது நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியினர், ஹியூஸ் நினைவாக ஜெர்ஸியில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

இன்றும் ஒவ்வொரு வீரரும் ஹெல்மெட் அணியும் போது, பெளன்ஸரை எதிர்கொள்ளும்போது அந்த வீரர்களின் நினைவில் ஹியூஸ் வாழ்வார். ஹியூஸ் என்றும் 63 நாட் அவுட்தான்.

Previous Post

பெங்களூரு அணி டாப்… சாம்பியன் கொல்கத்தா தோல்வி

Next Post

‘’ ‘புலி’ படத்தின் புரோமோஷனில் தவறு நடந்திருச்சு..!’’ – நட்டி

Next Post
‘’ ‘புலி’ படத்தின் புரோமோஷனில் தவறு நடந்திருச்சு..!’’ – நட்டி

‘’ ‘புலி’ படத்தின் புரோமோஷனில் தவறு நடந்திருச்சு..!’’ - நட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures