நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவ்வப்போது மத்திய மாநில அரசுகளை எதிர்த்து விமர்சித்து வருகிறார். சமூகம் சார்ந்த பிரச்னைகளையும் முன்னெடுத்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் வார இதழ் ஒன்றில் இனி இந்துத்துவா தீவிரவாதம் இல்லை என்று கூற முடியாது என்று பேசியிருந்தார். இது இந்துக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்தியது. அதோடு அவர் மீது சில ஊர்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் கமலின் இந்த கருத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவர் தான் கமலின் நிலவேம்பு கஷாயம் தொடர்பான கருத்திற்கும் வழக்கு பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கமல் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தால் அவர் மீது வழக்கு பதியலாம் என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.