ஜெயம் ரவி விண்வெளி வீரராக நடித்திருக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தின் ட்ரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம் எனக் கூறப்படுகிறது.
ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். ‘மிருதன்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் ‘டிக் டிக் டிக்’ படத்தை இயக்குகிறார்முதல் படமான ‘மிருதன்’ படத்தில் ஸோம்பி கான்செப்ட்டை தமிழில் அறிமுகப்படுத்திய சக்தி சௌந்தர்ராஜன், இந்தப் படத்தில் விண்வெளி வீரராக ஜெயம் ரவியை உருவாக்கி இருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக எதிரிகளின் சதியில் உருவான ராக்கெட் தமிழகத்தை அழிக்க இருக்கிறது. அதைத் தடுப்பதற்காக மேஜிக் கலைஞர் ஜெயம் ரவியை விண்வெளி வீரராக உருவாக்குகிறார்கள்.
ஜெயம் ரவி அவருக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தாரா என்பதே இந்தப் படத்தின் கதையாக இருக்கும் என்பது ட்ரெய்லரின் மூலம் தெரிய வந்துள்ளது.