ஒரு பக்கம் சொகுசு கார் சர்ச்சை சுழன்று அடித்துக்கொண்டு இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படமால் லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகை அமலாபால். இந்த இடத்திற்கு வந்து சுற்றிப்பார்த்த அமலாபால், “எனது கனவு இடத்திற்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அங்குள்ள பகுதிகளை ஒன்று விடாமல் விசிட் அடித்த அமலாபால், அங்குள்ள இளம் துறவிகளை சந்தித்ததையும், அவர்களின் புன்னகை தனக்கு கிடைத்ததையும் பாக்கியமாக கருதுகிறாராம். அமைதியை தேடியே இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் அமலாபால்.