இந்த வருடத்தில் மலையாள சினிமாவின் ராசியான ஜோடியாக மாறியவர்கள் தான் ஆசிப் அலி – அபர்ணா பாலமுரளி ஜோடி. தமிழில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ பட நாயகியான அபர்ணா பாலமுரளி, ஏற்கனவே ஆசிப் அலியுடன் சமீபத்தில் வெளியான ‘சண்டே ஹாலிடே’, ‘திருச்சிவப்பேரூர் கிளிப்தம்’ ஆகிய படங்களில் ஜோடியாக தொடர்ந்து நடித்திருந்தார்.
இப்போது ஆசிப் அலியின் தம்பி அஸ்கர் அலிக்கு ஜோடியாகவும் ‘காமுகி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பி.டெக்’ என்கிற படத்திற்காக மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளது இந்த ஜோடி. மிரிதுல் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் நிரஞ்சனா அனூப் என இன்னும் ஒரு கதாநாயகியும் நடிக்கிறார்.