Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

உலக லெவன் பரிதாப தோல்வி பாபர் அசாம், செஷாத் வெற்றிக்கு வழிவகுத்தனர்: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் பாராட்டு

September 13, 2017
in Sports
0
உலக லெவன் பரிதாப தோல்வி பாபர் அசாம், செஷாத் வெற்றிக்கு வழிவகுத்தனர்: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் பாராட்டு

2009ம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் பயணித்த பஸ் மீது லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், முன்னணி அணிகள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்து வருகின்றன. கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் பாகிஸ்தான் மீதான எண்ணத்தை மாற்றும் வகையிலும், நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், உலக லெவன் அணியுடன் 3 டி20 போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி உலக லெவன்-பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி, லாகூர் கடாபி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.

பாபர் அசாம் 86, அகமது செஷாத் 39, சோயப் மாலிக் 38 ரன்கள் எடுத்தனர். திசாரா பெராரா 2, மோர்னே மோர்கல், பென் கட்டிங், இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் பேட் செய்த உலக லெவன், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், டேரன் சம்மி தலா 29, ஹசீம் அம்லா 26 ரன்கள் எடுத்தனர். சதாப் கான், ருமான் ரேஸ், சோகைல்கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

2வது போட்டி இன்று இரவு 7. 30 மணிக்கு இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘’இது எங்களுக்கு மிக முக்கியமான போட்டி.

பாபர் அசாம், அகமது செஷாத் சிறப்பாக விளையாடி, வெற்றிக்கு வழிவகுத்தனர். கடைசி கட்டத்தில் சோயப் மாலிக்கும் நன்றாக செயல்பட்டார்.

பாகிஸ்தான் உள்நாட்டு வட்டத்தில், திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டே இருந்தால், வருங்காலத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.

போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ரசிகர்கள் மற்றும் பிசிபி-க்கு (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) நன்றி கூறி கொள்ள விரும்புகிறேன்’’ என்றார். உலக லெவன் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் கூறுகையில், ‘’பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியது.

பந்து வீச்சு தாக்குதலில் பல்வேறு வேறுபாடுகளை பாகிஸ்தான் காட்டியது. ஆனால் நாங்கள் ஒரே மாதிரியாக பந்து வீசியதாக கருதுகிறேன்.

பாகிஸ்தான் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது நன்றாக உள்ளது. அடுத்த 2 ேபாட்டிகளுக்கும் மைதானம் நிரம்பும் என நம்புகிறேன்’’ என்றார்.

பார்ட்னர்ஷிப்பை கட்டமைப்பதில் கவனம்
ஆட்ட நாயகன் விருது வென்ற பாபர் அசாம் கூறுகையில், ‘’எவ்வித அழுத்தமும் இல்லை.

ஆடுகளம் மெதுவாக இருந்தது. பார்ட்னர்ஷிப்பை கட்டமைப்பதில் கவனம் செலுத்தினோம்.

எனது பிட்னஸில் அதிக கவனம் செலுத்துகிறேன். ஆனால் பிட்னஸில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதாக கருதுகிறேன்’’ என்றார்.

Previous Post

ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின், ஜடேஜாவுக்கு தொடர் ஓய்வு ஏன்?: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம்

Next Post

உலக லெவன் அணியை ஜாலியாகக் கலாய்த்த ஹர்ஷா போக்ளே

Next Post
உலக லெவன் அணியை ஜாலியாகக் கலாய்த்த ஹர்ஷா போக்ளே

உலக லெவன் அணியை ஜாலியாகக் கலாய்த்த ஹர்ஷா போக்ளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை…! பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

September 26, 2026
லெனின் பாண்டியன் – திரைப்பட விமர்சனம்

லெனின் பாண்டியன் – திரைப்பட விமர்சனம்

September 26, 2026
ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

September 25, 2026
குசல், வெல்லாலகேவின் திறமையால் இங்கிலாந்தை 16 ஓட்டங்களால் வென்றது இலங்கை

குசல், வெல்லாலகேவின் திறமையால் இங்கிலாந்தை 16 ஓட்டங்களால் வென்றது இலங்கை

September 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures