இலங்கை- இந்திய அணிகள் மோதிய முதலாவதும் இறுதியுமான ரி. 20 போட்டியில் 7 விக்கெட்டுக்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (06) இடம்பெற்ற இந்தப் போட்டி, முன்னதாக மழை காரணமாக சிறிது நேரம் தாமதமாகவே ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.
இதனையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே பறிகொடுத்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியது.
இலங்கைக்கான இந்திய அணியின் சுற்றுப் பயணத்தில் இடம்பெற்ற டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி.20 ஆகிய சகல போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.