Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

யு.எஸ்.ஓபன் டென்னிஸ் நம்பர்-1 வீரர் நடால் கால் இறுதிக்கு தகுதி: கரோலினா பிளிஸ்கோவா முன்னேற்றம்

September 5, 2017
in Sports
0
யு.எஸ்.ஓபன் டென்னிஸ் நம்பர்-1 வீரர் நடால் கால் இறுதிக்கு தகுதி: கரோலினா பிளிஸ்கோவா முன்னேற்றம்

ஆண்டின் 4வது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு. எஸ். ஓபன் நியூயார்க் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்று போட்டி ஒன்றில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால்-64ம் நிலை வீரரான உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலோவ் பலப்பரீட்ைச நடத்தினர்.

இதில், 6-2, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் எளிதாக வெற்றி பெற்றார். 1 மணி நேரம் 41 நிமிடங்களில் போட்டி நிறைவுக்கு வந்தது.

4 ஆண்டுகளில் முதல் முறையாக யு. எஸ். ஓபன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள ரபேல் நடால், ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூபெலவ்வை எதிர்கொள்கிறார். 19 வயதேயாகும் டீன் ஏஜரான ஆன்ட்ரே ரூபெலவ், 9ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபினை, 7-5, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

வெற்றியை பறிக்க ஆன்ட்ரே ரூபெலவுக்கு, 2 மணி நேரம் 5 நிமிடங்கள் தேவைப்பட்டது. இதன்மூலம் 2001ம் ஆண்டு அமெரிக்காவின் ஆன்டி ரோடிக்கிற்கு பிறகு, யு. எஸ். ஓபன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை ஆன்ட்ரே ரூபெலவ் படைத்துள்ளார்.

மிக வேகமாக வளர்ந்து வரும் வீரராக கருதப்படும் ஆன்ட்ரே ரூபெலவ், கால் இறுதி சுற்றில், ரபேல் நடாலுக்கு கடும் போட்டியை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக தரவரிசையில் 53வது இடத்தில் உள்ள ஆன்ட்ரே ரூபெலவ், தொடரின் 7ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை, 2ம் சுற்றில் வீழ்த்தினார் என்பது கவனிக்கத்தக்கது.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்று போட்டி ஒன்றில், உலகின் முதல் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா-உலகின் 91ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெனீபர் பிராடி பலப்பரீட்சை நடத்தினர். இதில், 6-1, 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற, கரோலினா பிளிஸ்கோவாவுக்கு வெறும் 46 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

கால் இறுதி சுற்றில், தொடரின் 20ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ வாண்டேவேகெவுடன் மோதவுள்ளார் கரோலினா பிளிஸ்கோவா. 2015ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் விளையாடியவரான செக் குடியரசின் லூசி சபரோவாவை, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் கோகோ வாண்டேவேகெ கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ரபேல் நடாலுக்கு எச்சரிக்கை!
ஆன்ட்ரே ரூபெலவ்விடம் தோல்வியடைந்த டேவிட் கோபின் கூறுகையில், ‘’ஆன்ட்ரே ரூபெலவ்விடம் அதிக ஆற்றல் உள்ளது. சிறப்பாக விளையாடுகிறார்.

ஆக்ரோஷமான குணமுள்ள அவர், போட்டியின் ஒவ்வொரு பகுதியிலும் தன்னை மேம்படுத்தி கொள்கிறார். மிகச்சிறந்த வீரராக அவர் உருவெடுப்பார் என நம்புகிறேன்.

ஆன்ட்ரே ரூபெலவ் அபாயகரமான வீரர் என்பதால், கால் இறுதியில் ரபேல் நடால் எச்சரிக்கையுடன் விளையாடுவது அவசியம்’’ என்றார். ஆன்ட்ரே ரூபெலவ் கூறுகையில், ‘’உண்மையில் ரபேல் நடால் சாம்பியன்.

இது கால் இறுதி போட்டிதான். என்னிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.

இதனால் அழுத்தம் இல்லாமல், போட்டியை ரசித்து விளையாட முயல்வேன்’’ என்றார். ஆனால் ஆன்ட்ரே ரூபெலவ் அழுத்தம் இல்லாமல் விளையாட முடியும் என்பதை ஏற்க முடியாது என ரபேல் நடால் கருத்து தெரிவித்துள்ளார்.

கால் இறுதியில் பெடரர்-டெல்போ
அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டின் டெல் பேட்ரோ (டெல்போ), 1-6, 2-6, 6-1, 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை கடுமையாக போராடி வீழ்த்தினார்.

3 மணி நேரம் 35 நிமிடங்கள் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. கால் இறுதி சுற்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை அவர் எதிர்கொள்கிறார்.

ரோஜர் பெடரர், 6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்கில், ஜெர்மனியின் பிலிப் கொல்சிரெய்பரை வீழ்த்தியதன் மூலம், கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த 2 போட்டிகளும் இன்று காலை நடைபெற்றன.

Previous Post

பிரையன் லாரா சாட்டையடி

Next Post

சங்ககரா, ஜெயவர்த்தனாவுக்கு மாற்று வீரர்கள் கிடையாது: அர்னால்டு பேட்டி

Next Post

சங்ககரா, ஜெயவர்த்தனாவுக்கு மாற்று வீரர்கள் கிடையாது: அர்னால்டு பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures