அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவருடைய தற்கொலைக் குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
அனிதாவுக்கு ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய தீவிர முடிவை அவர் எடுப்பதற்கு முன்னால் அவரை ஆட்கொண்ட வலி மற்றும் வேதனையை என் இதயம் உணரமுடிகிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.