நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பு வாய்ப்பை இழந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி, கமல், தனுஷ் உள்ளிட்டோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.
மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனிதாவுக்கு நடந்தவை துரதிஷ்டவசமானவை. அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தனுஷ் அவர்களும் தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.