அறிமுக இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. வழக்கமான தெலுங்கு சினிமாவின் மசாலா ஆக்ஷன் படமாக இல்லாமல் அழகான காதலை மையப்படுத்தியிருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமன்றி, வெளியான அனைத்து இடங்களிலும் வசூலையும் குவித்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகப் பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பார்த்து சமூகவலைத்தளங்களில் பாராட்டிப் புகழந்து வருகிறார்கள்.