ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.