அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் மணப்பெண்ணுக்கான அலங்காரம் இல்லாமல் பட்டுப்புடவை அணியாமல், நகை அணியாமல் ரொம்ப சிம்பிளாக இருந்தார்.
காட்டன் புடவையில் ஜாரா தனது திருமணத்தின்போது தனது பாட்டியின் காட்டன் புடவையில் காட்சியளித்தார். இதுவரை இப்படி ஒரு நிலையில் எந்த ஒரு மணப்பெண்ணையும் நாம் பார்த்திருக்க மாட்டோம். அலங்காரம், உடை உள்ளிட்டவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுமே தவிர மணப்பெண் அலங்காரம் இல்லாமல் இருக்க மாட்டார்.
இதுதான் பாரம்பரியம். பாரம்பரியத்தை தகர்த்த அந்த பாரம்பரியத்தை ஜாரா தகர்த்தெறிந்தார். இவரது திருமண புகைப்படம் பதிவேற்றம் செய்த நாளிலேயே தான் அலங்காரம் செய்து கொள்ளாததற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் ஜாரா கூறுகையில், ஏராளமான மேக்கப்புகள், அதிக எடை கொண்ட உடை, ஏராளமான நகைகள் ஆகியவற்றை மணப்பெண் அணியும் ஒரே கோலத்தை பார்த்து பார்த்து எனக்கு பிடிக்கவில்லை. பொருளாதார நிலையை காட்டாது இதுபோல் பட்டுப்புடவை, நகை அணிந்தால் மட்டுமே தாங்கள் பொருளாதார ரீதியில் நன்றாக இருக்கிறோம் என்பதை காட்டாது. இது முழுக்க முழுக்க மணப்பெண்ணின் விருப்பத்துக்கு மாறானது.
பெண்ணுக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்று விரும்பினால் செய்யுங்கள். அதனால் எந்த வித நன்மையும் அந்த பெண்ணுக்கு ஏற்படாது. கணவர் பச்சைக் கொடி நான் மணப்பெண் அலங்காரம் எதையும் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியபோது எனது குடும்பத்தினர் மிகவும் கவலை அடைந்தனர். பாரம்பரியத்தை மாற்றக் கூடாது என்றும் கூறினார். இதுகுறித்து என்னை திருமணம் செய்ய இருந்த கேலதிடம் கேட்டதற்கு அவர் எந்த நிபந்தனையுமின்றி ஓகே சொல்லிவிட்டார் என்று அந்த பெண் பதிவிட்டுள்ளார்.