பிக்பாஸ் ஷோவில் பிக்பாஸ் என்ற பெயரில், பின்னால் இருந்து ஒலிக்கும் கம்பீர குரல் யார் என்பது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை என்ற செய்தியை அடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் தற்போதைய தமிழகத்தின் ஹாட் நியூஸ்..
இந்த இரண்டு டாபிக் தான் தமிழ்நாட்டில் தற்போது அதிகமாக பேசபடுகிறது..
பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நகர்ந்து வரும் இந்த ஷோவில், பின்னால் இருந்து ஒலிக்கும் கம்பீர குரல் யாருடையது என்ற கேள்வி பலருக்கும்தோன்றி இருக்கும்..
பிக்பாஸில் ஒலிக்கும் அந்த குரல் பிரபல டப்பிங் கலைஞரான கோபி நாயரின் குரல் என்று கூறப்பட்டது..யார் அந்த கோபி நாயர் என்றால் மாகபாரத்தில் சகுனி வாய்ஸ்க்கு டப்பிங் கொடுத்தவர்தான்..
ஆனால் அவரோ அந்த குரல் தன்னுடையது இல்லை என்று கூறியிருந்தார்.
அப்போ யாரு அந்த குரல்?
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஷோ மூலம் பிரபலமடைந்தவரான கோகுல்நாத் தான் பிக்பாஸ் ஷோவின் பின்னணி வாய்ஸ் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் இவர் அம்புலி படத்தில் அந்த மிருகமாக நடித்துள்ளார்