தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில், இங்கிலாந்து அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகள் முடிவில், இங்கிலாந்து அணி தொடரில் 2–1 என முன்னிலை இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 362, தென் ஆப்ரிக்கா 226 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 224/8 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. பிராட் (5), ஆண்டர்சன் (2) அவுட்டாக, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 243 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.